விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நாளையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மாயாவுடன் கமல்ஹாசனை சேர்த்து வைத்து சில மீம்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சரி நெட்டிசன்கள் தான் இப்படி செய்கிறார் கமலை அசிங்கப்படுத்தி வருகிறார்கள் என்று பார்த்தால் விஜய் டிவி புகழ், குரோஷி காமெடி என்ற பெயரில் கமலுக்கு மாயாவை தான் பிடிக்கும் என்று அவருக்குத்தான் சப்போர்ட் அதிகம் என்று பேசியுள்ளனர். இதனால் கமல் ரசிகர்கள் பலரும் கோபமடைந்த நிலையில், தற்போது இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்சன்மா.., களைகட்டும் சந்தை.., ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்து அசத்தல்!!
அதாவது புகழ், நானும் என் நண்பன் குரேஷியும் ஒரு ஈவென்ட்டுக்கு சென்ற போது அவர்கள் கொடுத்த கண்டெண்ட்டில் கமல் குறித்து பேசி காயப்படுத்தி இருந்தால், கமல் ரசிகர்கள் என்னை மன்னித்து கொள்ளுங்கள். இது மாதிரி இனி நடந்து கொள்ள மாட்டேன். நான் அந்த மாதிரி ஆளு கிடையாது என்று கூறியுள்ளார். இதை பார்த்த கமல் ரசிகர்கள் அந்த பயம் இருக்கணும்டா என்று கூறி வருகின்றனர்.