தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 12ம் தேதி வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்திருந்தாலும் கூட நாளுக்கு நாள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்றே சொல்லலாம். இப்படம் வெளியான முதல் நாளில் உலக முழுவதும் ரூ 16 கோடி வசூல் செய்திருந்தது. இதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறை நாளில் படத்தோட வசூல் எகிறும் என படக்குழு எதிர்பார்த்து இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியாகி மூன்று நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் இப்படம் ரூ 46 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் இப்படம் 50 கோடி வசூலை எட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.