தற்போதைய காலகட்டத்தில் மக்களை நூதனமான முறையில் பணமோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு கும்பல் ஆபாச படங்களை பார்க்கும் நபர்களை குறித்து வைத்து பணமோசடி செய்து வந்த கும்பலை தற்போது காவல்துறை கைது செய்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது இந்த கும்பல் ரேண்டமாக ஒரு நம்பரை அழைத்து, எதிர்புறம் இருக்கும் நபரிடம் நீங்கள் இரவு 2 மணி வரை ஆபாச படங்களை பார்த்துளீர்கள், எனவே உங்களை நாங்கள் கைது செய்ய இருக்கிறோம் என்று கூறி முதலில் பயத்தை ஏற்படுத்தி, இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 20 ஆயிரம் தரவேண்டும் கூறி பணமோசடி செய்து வந்துள்ளனர்.
இந்த கும்பலிடம் ஏமாந்த நபர்கள் மறைமுகமாக காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், தொடர்ந்து விசாரணை செய்த் போலீஸ் சம்மந்தப்பட்ட 6 பேர் கொண்ட கும்பலை வளைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 5 பேர் கல்லூரியை இடையில் விட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.