தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் 11ம் மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு “இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டம்”. ஆனால் இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் நிலையில், இப்பொழுது இந்த திட்டத்தை முதன் முதலாக புதுச்சேரி அரசு செயல்படுத்த இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது குறித்து முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நடப்பாண்டு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான “இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டம்” வருகிற ஜனவரி 25ம் தேதி முதல் ஆரம்பிக்க இருப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதனுடன், அந்த மாவட்டத்தை சிறந்த சுற்றுலா தலமாக ,மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.