தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பள்ளிக்கூடத்தில் தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதி அருகே உள்ள தனியார் பள்ளியில் செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10 வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் முதல்வராக இருந்து வரும் கார்த்திகேயன் (45) என்பவர் செல்வியை தொடர்ந்து தனியாக சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது அதை பார்த்த ஆசிரியர்களுக்கு அது தவறாக தெரியவில்லை.
அதனால் யாரும் அவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கார்த்திகேயன் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதை தனது பெற்றோர்களிடம் செல்வி கூற, அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து, முதல்வரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.