பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னையில் நடக்க இருக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க சென்னைக்கு வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகையையொட்டி சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கும் விழாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட கூடாது என்பதற்காக கீழே கொடுக்கப்பட்ட பாதை மாற்று வழியாக செல்ல வேண்டும்.
- சென்னையில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் பாதை வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும். குறிப்பாக அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசை பாதைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
- அதே போல் வட சென்னை பகுதியில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி பாலத்தில் திருப்பி விடப்பட்டு, பேசின் பிரிட்ஜ் டாப், மூலக்கொத்தளம் சந்திப்பு, ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பிவிடப்படும்.
பாடகி ஆண்ட்ரியாவை கழட்டிவிட காரணம் இது தானா? பல வருடங்களுக்கு பிறகு ஓப்பனாக பேசிய ராக் ஸ்டார் அனிருத்!!
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை நேரம் பார்த்து தொடங்கி போக்குவரத்து நெரிசலில் இருந்து நீங்கள் அடையக்கூடிய இடத்திற்கு சென்றடையுங்கள் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.