khelo india youth games 2024 சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ல் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியினை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான அனுமதி சீட்டுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
khelo india youth games 2024
இந்த விளையாட்டு போட்டிகள் வருகிற ஜன.19 ம் தேதி முதல் 31 வரை தமிழகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகியவை. அதற்கான விளையாட்டு மைதானங்கள் சர்வதேச அளவில் தயாராகி வருகிறது.
சென்னையில் மட்டும் 10 க்கு மேற்பட்ட மைதானங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது. 20 வகை விளையாட்டு போட்டிகள் சென்னையில் மட்டும் நடத்தப்படுகின்றன. மற்ற 3 மாவட்டங்களில் தலா 2 போட்டிகள் வீதம் மொத்தம் 26 வகை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அடக்கடவுளே.., தல தோனி தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.., பின்னணியில் இருக்கும் கதை என்ன?
இந்த KHELO INDIA போட்டியானது 18 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் பல வீரர்கள் இந்திய விளையாட்டு துறையில் பங்கேற்க முடியும். இந்த போட்டியானது ஆடவர், மகளிர் என தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியானது இதற்கு முன்னர் 2 முறை நடத்தப்பட்டுள்ளது.
FREE PASS | REGESTRATION |
FREE PASS | DOWNLOAD |
இந்த 2024 ம் வருடம் இந்த போட்டியானது தமிழகத்தில் நடைபெறுகிறது. வருகிற ஜன.19 தேதி இந்த போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். ஜன.19 – 31 வரை மாலை 4 to 6 மணி வரை இந்த போட்டிகள் நடைபெறும். மொத்தம் 6000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதற்கான அனுமதி சீட்டினை TNSPORTS என்ற செயலி (அல்லது) www.SDAT.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி சீட்டினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.