தமிழகத்தில் உள்ள போக்குவரத்து துறையில் இருக்கும் ஊழியர்கள் ஊதியம் உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்து வந்தனர். ஆனால் அந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்காததால் போக்குவரத்து வரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டனர். இதனால் அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்கி வந்தது. அதில் சில விபத்துகளும் நேரிட்டது.
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊழியர்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல என்று நீதிமன்றம் கூறிய நிலையில், பொங்கல் முடிந்த பிறகு மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து கழகத்திடம் இன்று பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் அரசு நிதி நிலைமை அறிந்த பிறகே ஊழியர்களின் அகவிலைப்படி வழங்கப்படும் என்று கூறப்போவதாக அமைச்சர் கூறியுள்ளார்.