தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேமில் பெரும்பாலானோர் மோகத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேம்களை தான் அதிகமாக விளையாடி வருகின்றனர். இந்த கேமில் மூழ்கி போன சிலர் கொலை செய்யும் அளவுக்கு இறங்கி விடுகின்றனர். அந்த வகையில் இப்படி ஒரு சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தான் பாபி தாஸ். அவர் ஆன்லைன் கேமான ப்ரீ பையரில் அதிகம் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி அவருடைய 4 நண்பர்களுடன் சேர்ந்து தான் அந்த இளைஞன் தினசரி விளையாண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாபி திரும்ப வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் போலீசிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில் வனப்பகுதி ஒன்றில் எரிந்த நிலையில் பாபி உடலை கண்டெடுத்தனர். இது குறித்து காவல்துறை இறந்த இளைஞர் ஆன்லைன் கேம் பாஸ்வேர்ட் பகிராததால் எரித்து கொலை செய்துவிட்டதாக அந்த இளைஞனின் 4 நண்பர்கள் தெரிவித்தனர். அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.