தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், தற்போது ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மதுரையில் இரவு நேரம் ஆரம்பித்த கனமழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும். அதுமட்டுமின்றி தென் [மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பிரிச்சு மேய போகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.