ராஷ்மிகா – விஜய் திருமணம்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் இது குறித்து இரு தரப்பினரும் வாயை திறக்காமல் இருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து மவுனம் கலைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது, நடிகை ராஷ்மிகாவிற்கும் எனக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியாகி வண்ணம் இருக்கிறது.
அது உண்மை அல்ல, வெறும் வதந்தி தான். எனக்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கல்யாணம் ஆகிறது. இதன் மூலம் நான் வேகமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கின்றனர். இது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் ராஷ்மிகா குறித்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.