உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிவடைந்த நிலையில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
அயோத்தி – ராமர் கோவில்:
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு ராமரின் திருவுருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவில் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வண்ண விளக்குகளால் கோவில் வளாகம் பிரகாசமாக காட்சியளித்தது. பல்வேறு துறைகளை சார்ந்த விஐபிக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற விழாவில் பொதுமக்கள் காண அனுமதி அளிக்கப்படவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
முன்பதிவு தொடக்கம் :
அதன்படி நாளை முதல் பொதுமக்கள் பால ராமனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்கள் https://srjbtkshetra.org என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதே இணையத்தளத்தில் பக்தர்கள் நன்கொடை செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தரிசன நேரத்தை நள்ளிரவு வரை அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.