புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி மூலம் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 15 முறை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் புழல் சிறையிலிருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார் . இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.