Home » சினிமா » CWC – 5ல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்., யாருன்னு தெரியுமா? வெளியான முழு லிஸ்ட் இதோ!!

CWC – 5ல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்., யாருன்னு தெரியுமா? வெளியான முழு லிஸ்ட் இதோ!!

CWC - 5ல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்., யாருன்னு தெரியுமா? வெளியான முழு லிஸ்ட் இதோ!!

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது நம்பர் ஒன் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஷோவில் யார் யார் கோமாளி என்று போட்டியாளர்கள் யார் யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் லீக்காகி உள்ளது.

அதாவது இந்த ஷோவில் போட்டியாளராக நடிகை மாளவிகா மேனன், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், பிக்பாஸ் விஷ்ணு விஜய், நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ‘ஹேமா’ மற்றும் நடிகை வடிவுக்கரசி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கோமாளிகளாக  புகழ், பாலா, KPY சரத், தங்கதுரை உள்ளிட்டோருடன் புதிய வரவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

மக்களே., இலவசமாக சொந்த வீடு கட்டணுமா?.., இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்.., முழு விவரம் உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top