வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது பல நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பனிமூட்டம் சாலைகளை மறைத்து காணப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களை இந்த பனி மூட்டத்தை பயன்படுத்தி எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்பட கூடாது என்பதற்காக வட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் தற்போது ஒரு மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஹரியானா மாநிலத்தில் கடுமையான பனி நிலவி வருவதால் மாணவர்களின் உடல்நலத்தை கருதி அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 27 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.