உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு, இந்த சீசனில் அதிக சர்ச்சைகள் கிளம்பின. மேலும் இந்த சீசனில் அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். இந்த வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியவர் தான் விஷ்ணு விஜய். தற்போது இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பூர்ணிமாவுடன் இருந்த பாண்டிங் குறித்து பேசியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் அவர் பேசியதாவது, பிக்பாஸ் வீட்டில் கொஞ்ச நாட்களுக்கு பிறகு நானும் பூர்ணிமாவும் நல்ல அட்டாச்சாக ஆரம்பித்தோம். எங்களுக்குள்ள நல்ல பாண்டிங் இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கேமராவுக்காக சில விஷயங்கள் செய்து வந்தார். அப்போது தான் எனக்கு அவரை நம்பலாமா வேண்டாமா? என்று தோன்றியது. ஒரு தடவை நானே அவரிடம் கேட்டேன். என் மீது எதுவும் பீலிங்ஸ் இருக்கா என்று, ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை, அதனால் மறுபடியும் நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.