தமிழகத்தில் மாணவ மாணவியர்கள் கல்வி திறனை மேம்படுத்த பல திட்டங்களை அரசு கொண்டு வந்த வாறு இருக்கிறது. மேலும் இலவச மிதிவண்டி சில மாவட்டங்களில் கொடுக்கப்பட தொடங்கி விட்டனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சேலம் இரா.அருள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்க தொடங்கினார். அப்போது திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் அவரை கொடுக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது அரசு சார்பாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது,அரசியல் சார்ந்து கொடுக்கவில்லை என்று எம் எல் ஏ தரப்பில் கூறப்பட்டது. இந்த வாக்குவாதத்தால் எம்.எல்.ஏ அருள் திடீரென மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நல்ல சொற்களை கற்றுக் கொடுக்கும் இடத்தில் இந்த மாதிரியான அநாகரீகமான செயல்கள் நடந்து விட்டது. உங்களை நான் அசிங்கப்படுத்தி விட்டேன் கண்ணுங்களா மன்னித்து விடுங்கள்.நான் அரசியலுக்காக வரவில்லை என்று கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.