திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியில் ஒன்றாக இருந்து வந்தது தான் மதுவிலக்கு திட்டம். இதனை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், 500 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டு, தற்போது 4800 மதுபான கடைகளே இயங்கி வருகிறது. மேலும் அரசுக்கு வரும் வருவாய்களில் மிக முக்கியமாக டாஸ்மாக் நிர்வாகம் இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படி 500 கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைய தொடங்கியுள்ளது. இதனால் தற்போது தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது குவார்ட்டருக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 30ரூபாயும், புல் பாட்டிலுக்கு 80 ரூபாயும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு நடக்க இருக்கும் நாடாளுமனற தேர்தலுக்கு முன்னரா அல்லது பின்னரா என்று அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.