நேற்று நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை நிலை நாட்டியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்பவர் தான் ஷமர் ஜோசப். அதாவது 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் அவருடைய பெயர் தற்போது உலகமெங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர் எப்படி கிரிக்கெட்டில் சேர்ந்தார் என்பது குறித்து தமிழக கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா கூறியுள்ளார். அதாவது ஷமர் ஜோசப் செக்யூரிட்டி பணியில் இருந்து தான் பின்னர் கிரிக்கெட்டராக மாறியுள்ளார். ஒரு தடவை பிரசன்னா கரீபியன் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் ஷமர் ஜோசப் வலை பயிற்சி பவுலராக இருந்த சமயத்தில் அவரின் பந்து வீச்சை பார்த்து மிரண்டு போயுள்ளார்.
அப்போது அவரை அழைத்து பிரசன்னா விசாரித்த போது தான், தான் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதாக, பந்து வீசினால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று வந்தேன் என கூறியுள்ளார். அதன் பிறகு பிரசன்னா கூறியது போல் பந்து வீசி காட்டியுள்ளார். அசந்து போன பிரசன்னா, உடனே கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கேப்டன் இம்ரான் தாஹிரை அழைத்து இந்த வீரர் கண்டிப்பாக ப்ளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் தான் தற்போது ஷமர் ஜோசப் என்ற உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளார். அவரை தூக்கி விட்டு அழகு பார்த்தவர் தான் தமிழன் கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா என்பது குறிப்பிடத்தக்கது.