அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தி.மு.க ஆட்சியில் 2006 முதல் 2011 ம் ஆண்டு வரை தமிழ் நாட்டின் உயர்கல்வி துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி.. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி சொத்து சேர்த்ததாக அவரையும் அவர் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றசாட்டு வைத்தனர். விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்களது குற்றசாட்டு நிரூபிக்க படாத காரணத்தால் 2016 ம் ஆண்டு நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது.
செக்யூரிட்டியாக இருந்த ஷமர் ஜோசப்.., இப்போ சர்வதேச கிரிக்கெட் வீரர் – தூக்கிவிட்டு அழகுபார்த்த தமிழர்!
மீண்டும் 2017 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று கொண்டு வந்தது. கடந்த 2023 டிசம்பர் 19 ம் தேதி பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் டிசம்பர் 21 ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவர்க்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவர்கள் சிறை தண்டனையை 1 மாத காலம் நிறுத்தி வைத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த சிறை தண்டனையில் இருந்தும் நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்தும் விலக்கு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.