தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட். தமிழ்நாடு மாநகர பேருந்துகளிலும் UPI மூலம் பஸ் கட்டணம் வசூலிக்கும் முறை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக சென்னையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் தற்போது உலகெங்கிலும் E – MONEY என்று சொல்லப்படும் டிஜிட்டல் கரன்சிகளை மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். cheque , DD ஆகியவை RTGS , NEFT என்று மாறி வங்கிகளில் பண பரிவர்த்தனைகள் மிக சுலபமாகி விட்டது. ATM ல் பணம் எடுப்பது கூட தற்போது குறைந்து கொண்டு வருகிறது. படித்தவர் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் இந்த paytm , phonepe , Gpay என்று சொல்லப்படும் UPI வழியாக பண பரிவர்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.
எல்லாம் மது படுத்தும் பாடு.., ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை தள்ளிவிட்ட கணவர் – பரிதாபமாக போன 2 உயிர்!!
தனியார் பேருந்துகளில் இந்த UPI வசதி வந்து விட்டநிலையில் தற்போது மாநகர பேருந்துகளிலும் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சென்னை குரோம்பேட்டை நகர பணிமனை பேருந்து நடத்துனர்களிடம் டிஜிட்டல் முறையில் பணம் பெற்று டிக்கெட் வழங்கும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் பணம் அனுப்புவதால் பேருந்துகளில் நடக்கும் சில்லறை தட்டுப்பாடுகள் குறைக்கப்படும்.
விரைவில் இந்த முறை தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் செய்ய இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.