தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி ஒரு சில மாவட்டங்களில் அதிகாலையில் அதிக பனிமூட்டம் நிலவும். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் இன்று பிப்ரவரி 2ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.