மக்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் வார இறுதி நாட்களிலும் சரி அசைவ உணவை விரும்பி உண்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் அதிகமாக விரும்பி உண்ணும் இறைச்சிகளில் ஒன்று கோழி கறி. மேலும் இதை மற்ற இறைச்சியை ஒப்பிடும் பொழுது அதன் விலை மிகவும் குறைவு என்பதால் இதன் நுகர்வு திறன் மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இதன் அடிப்படையில் உற்பத்தி குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.107 ஆக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு :
தமிழகத்தில் உள்ள பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. மேலும் உற்பத்தி மற்றும் நுகர்வு திறன் அடிப்படையில் தினசரி பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) நிர்ணயம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் மூலம் விலை நிர்ணய அடிப்படையில் கடந்த 1-ந்தேதி ஒரு கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விலையானது ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் 25-ந்தேதி ரூ.88 ஆக இருந்த கறிக்கோழியின் விலை தற்போது உற்பத்தி குறைவு மற்றும் மக்களின் நுகர்வு அதிகரிப்பு காரணமாக படிப்படியாக உயர்ந்து நேற்று கிலோ ரூ.107 ஆக இருந்தது. மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.19 அதிகரித்ததன் காரணமாக கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.