தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் செய்தி என்றால் அது விஜய் அரசியல் என்ட்ரி கொடுப்பது குறித்து தான். இதற்காக தளபதி தன்னை தீவிரமாக தயார் படுத்தி வருவதாக மக்கள் இயக்கத்தினர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். மேலும் கட்சிக்கு “தமிழக முன்னேற்ற கழகம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமால் இருந்து வரும் நிலையில், தற்போது இந்த விஷயத்தில் அஜித் போட்டி போட போகிறார் என்று பத்திரிகையாளர் ஒருவர் கூறியது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் எந்த நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறதோ, அதே நாளில் விடாமுயற்சி படத்தின் First லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது விஜய்யின் அரசியல் குறித்து வெளியாகும் செய்திகள் காட்டு தீப்போல பரவி வரும் நிலையில், அதை அணைப்பவதற்காக மட்டுமே அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி படத்தின் First லுக் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.