நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது மற்றும் வேட்பாளர் தேர்வு என்பது குறித்து தி.மு.க. தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் தி.மு.க. கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை போன்ற தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.