கேன்சர் செல்களை அழிக்கும் சிறந்த உணவுகள். சமீபத்தில் சோசியல் மீடியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது கேன்சர் நோயினால் ஏற்படும் மரணம் தான். கேன்சர் நோய் வந்தாலும் சிலர் அதிலிருந்து மீண்டு இன்னும் தங்கள் வாழ்நாளை கழித்து கொண்டுதான் இருக்கின்றனர். சிலர் தங்கள் வாழ்நாளை இழந்து விடுகின்றனர். இந்த கேன்சர் நோயிலிருந்து எப்படி தப்பிப்பது? நாம் தினம் சாப்பிடும் உணவு பொருட்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே பெரும்பாலும் இந்த நோயிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
கேன்சர் செல்களை அழிக்கும் சிறந்த உணவுகள்
தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணியின் மரணம் குறித்து அனைவரும் அறிந்ததே. அவர் சிறிது காலமாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 47 வது வயதில் இறந்தார்.இது திரையுலகினர் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்து விட்டதாக நேற்று ஒரு பீதியை அவரே கிளப்பி விட்டார். புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
இப்படி சில நாட்களாகவே புற்றுநோய் குறித்த செய்திகள் நம்மில் பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த புற்று நோய் வராமல் தடுக்க நாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை நமது உணவு பழக்க வழக்கங்களில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சிறுதானியங்கள்:
முதலில் நமது உணவில் கார்போஹைட்ரெட் அதிகம் நிறைந்த அரிசி பொருட்களை 3 வேலையும் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இதிலுள்ள மாவு சத்துக்கள் புற்று நோய் செல்களை எளிதில் வளர விடும். அதற்கு பதிலாக சிறுதானிய உணவுகளை எடுத்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக குதிரை வாலி, கம்பு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்., ரூ.9,000 ஊதிய உயர்வு? எப்போது இருந்து தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!!
பழங்கள்:
கேன்சர் வராமல் தடுக்கும் பழங்கள் – சீத்தாப்பழம், பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, கருப்பு திராட்சை மற்றும் உலர் திராட்சை , வைட்டமின் சி நிறைந்த பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய்)
காய்கறிகள்:
வேகவைத்த கேரட், தக்காளி, முட்டைகோஸ், சிவப்பு முள்ளங்கி, காலிபிளவர் , ப்ரோக்கோலி, பட்டன் காளான், பீன்ஸ், வெங்காயம், சக்கர வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்றவை புற்று நோய் செல்களை அழிக்க வல்லது.
அசைவ உணவு :
புற்று நோய் செல்களை அழிப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் இன்றியமையாதது. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த கடல் மீன்கள் உணவில் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
துணை உணவு பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய், இஞ்சி, கருப்பு மிளகு, வெள்ளை மிளகு, மஞ்சள், பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்றவை.