Home » சினிமா » அரசியலில் ஆரம்பித்து முதல் அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

அரசியலில் ஆரம்பித்து முதல் அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

அரசியலில் ஆரம்பித்து முதல் அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது தொடங்கி இருக்கும் அரசியல் கட்சி தான் “தமிழக வெற்றி கழகம்”. சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில், இதற்கு பல தரப்பினர் ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் படத்தில் அடுத்து நடிக்க மாட்டார் என்று அறிவித்த நிலையில், ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் இருந்து ஒரு முக்கிய அறிக்கை என்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் என்னுடைய வணக்கம், தமிழக மக்களின் பேரன்அன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள், அன்புடன், விஜய்தமிழக வெற்றி கழகம் என்று தெரிவித்து தனது உரையை முடித்துள்ளார்.

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து மழை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top