தை அமாவாசை 2024. மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நம்முடைய முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும். அதுமட்டுமின்றி, வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை என்று சொல்லப்படும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை. இந்த அமாவாசைகளில் பித்ரு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்வில் அணைத்து நலன்களும் வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த வருடம் தை அமாவாசை அமைகிற நாள், நேரம் குறித்து கீழே காணலாம். thai amavasai 2024 date and time.
தை அமாவாசை 2024
வேத நாட்காட்டியின்படி 30 சந்திர கட்டங்களின் சுழற்சி உள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு திதி என்று அழைக்கப்படுகிறது.இருண்ட சந்திரனின் திதி, வானத்தில் சந்திரனைக் காணாத போது, அமாவாசை திதி அல்லது அமாவாசை என்று குறிப்பிடப்படுகிறது.
இந்து சந்திர நாட்காட்டியின்படி, ஒரு சந்திர மாதம் பௌர்ணமி அல்லது முழு நிலவு நாளில் தொடங்குகிறது, மேலும் அமாவாசை நடுவில் விழுகிறது. அமாவாசை பல்வேறு செயல்களுக்கு, குறிப்பாக முன்னோர்களை வணங்குவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. தை என்பது தமிழ் நாட்காட்டியின் 10 வது மாதமாகும், மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
முக்கியத்துவம்:
தை அமாவாசை என்பது புனிதமான உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆகும். எனவே முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு சடங்குகளைச் செய்வதற்கு இன்னும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எனவே, பொதுவாக இறந்த ஆத்மாக்களுக்கு சாந்தம் அளிக்கவும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் சடங்குகளைச் செய்வதற்கு இந்த தை அமாவாசையை தேர்வு செய்கிறார்கள்.
தை அமாவாசை சடங்குகள்:
பித்ரு வழிபாடு சூரிய உதயத்திற்கு பிறகுதான் செய்யவேண்டும் என்பது மரபு. ப்ரம்ம முகுர்த்தத்தில் பித்ரு வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் – வனத்துறையினர் அறிவிப்பு!!
அம்மாவாசை அன்று முதலில் எள்ளும் தண்ணீரும் இறைத்து பித்ருக்களுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. பிறகு, விரதம் இருந்து இலையில் படையலிட்டு வழிபடுவது ஒரு வழக்கமாகும். இலையில் படையில் போட்டு வழிபடுவது மதியம் வரை மட்டுமே செய்ய முடியும், மாலை வேளையில் அவ்வாறு வழிபடக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும் காகங்கள் / காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால்,முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
தை அமாவாசையை அனுசரிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
தை அமாவாசையின் புனித நாளில் முன்னோர்களை மரியாதை செய்வதால் பித்ரு தோஷம் நீங்கும்,உறவு பிரச்சினைகளை தீர்வாகும்,ரோக்கியம், செல்வம், வெற்றி, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
இந்த வருடம் :
2024ஆம் ஆண்டு தை அமாவாசையானது பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. thai amavasai 2024 date and time.