வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் வருவதால் உயர்கல்வி துறை அமைச்சர் அதிரடி அறிக்கை
நாடாளுமன்ற தேர்தலானது 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இது கடந்த முறை 2019 ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வருடம் ஜூன் மாதத்தோடு பிரதமரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் 2024 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்த தேர்தல் குறித்த தேதி இன்னும் அதிகார பூர்வமாக வெளியிடப்பட வில்லை.
பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்க விருக்கும் செமஸ்டர் தேர்வுகளை இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னே நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இது குறித்து அதிகார பூர்வ முடிவு வெளியிடப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மக்களவை தேர்தல் நடத்த தேவையான முன்னேற்பாடுகள் குறித்து இன்று தமிழக தேர்தல் ஆணையத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.