ஆந்திராவில் முக்கிய பகுதியான பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்த ராம்பாபு (33) என்பவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடன் வேலை பார்த்த ஆஷா(26) என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறது. இந்நிலையில் ராம்பாபு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக கூறிய நிலையில், ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்பாபு மனைவியை கடுமையாக கொடுமைப்படுத்த தொடங்கினார். எனவே இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்து ஆஷா தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ராம் பாபுவுக்கு 2வது கல்யாணத்திற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தது. இதை அறிந்த ஆஷா எனக்கு முறைப்படி விவாகரத்து வேண்டும் என்றும், எனக்கு இழப்பீடு தொகையை வழங்க கேட்டுள்ளார். உடனே தருவதாக ஒப்புக் கொண்ட ராம்பாபு, புகாரை வாபஸ் வாங்க கூறியுள்ளார். முடியாது என்று ஆஷா கூறிய நிலையில், காண்டான கணவன் மனைவிக்கு மொட்டை அடித்து சாலையில் அடித்து இழுத்துச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்த நிலையில், உடனே சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராம்பாபு தேடி வருகின்றனர்.