டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் அருகில் கிட்டத்தட்ட ரூபாய் 777 கோடி செலவில் புதிதாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. மேலும் இந்த சுரங்கப்பாதை உலக தரத்தில் கட்ட பட்டிருப்பதாகவும், நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால், தீ தடுப்பு மேலாண்மை மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. எனவே இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடியால் கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாமல் இருந்து வரும் நிலையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது அந்த சுரங்கப்பாதையின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளே தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை கூறுகையில், இந்த சுரங்க பாதையை பழுது பார்ப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம். எனவே இதை முற்றிலும், சீரமைக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சுரங்கப்பாதையை கட்டிய எல்&டி நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.