தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருவதால் மக்கள் பலரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விநியோகம் செய்து வருகிறது. இப்படி இருக்கையில் பெட்ரோல் பங்கில் சில முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் நம் அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவதற்கு முன், மீட்டர் 0-இல் இருக்கிறதா? என்பதை மட்டுமே கவனிக்க செய்கிறோம், ஆனால் அதையும் தாண்டி அதன் தரத்தை யாரும் கவனிப்பதில்லை. இதனால் தான் மக்கள் ஈசியாக ஏமாந்து விடுகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது மத்திய அரசு விதியின் படி, டென்சிட்டி அளவு பெட்ரோலுக்கு 730 to 800 மற்றும் டீசலுக்கு 830 to 900 kg per cubic meter என அதிக வெப்ப நிலைக்கு ஏற்ப கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் குறைவான அளவு இருந்தால் பெட்ரோல், டீசல் அளவு குறையும். எனவே தரத்தின் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் குறிப்பிடப்பட பட்டுள்ளபடி அந்த பெட்ரோல், டீசல் விநியோக நிறுவனத்தின் மேல் நாம் புகார் செய்யலாம். எனவே இனிமேலாவது மக்கள் பெட்ரோல், டீசல் போடுவதற்கு முன் அளவை கவனிக்க தவறவிடாதீர்கள்.