தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஓவியா. முதல் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். சொல்ல போனால் அவருக்கு தான் ஆர்மி எல்லாம் உருவானது. ஆனால் அதில் தாக்குப்பிடிக்க முடியாமல் அவரே வெளியே சென்றார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர், ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அவருடன் சேர்ந்து சில வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. எனவே 32 வயதாகும் ஓவியா ஏன் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த போதிலும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். இந்நிலையில் மவுனம் கலைத்த ஓவியா, தனது கல்யாணம் குறித்து யாராவது கேட்கும் போது, தான் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்று கூறி தனியாக இருப்பதை விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.