TNTRB SGT Notification 2024. தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்படும் காலதாமதத்தைக் களைய 17.8.87 கல்வி நாளிதழில் G.O.Ms.No.1320 இல் ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை சேவைக்கான இரண்டாம் நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே காணலாம்.
TNTRB SGT Notification 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் – தமிழ்நாடு தொடக்கப்பள்ளி கல்வி துணை சேவை
காலிப்பணியிடங்கள் பெயர்:
இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் (Secondary Grade Teachers)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கைக்கு:
இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள் – 1768
கல்வித்தகுதி:
உயர்நிலை(12ஆம்) வகுப்பு தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும், தொடக்க கல்வியில் டிப்ளோமா/இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அடிப்படை தகுதி:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) (தாள் – I) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
அதிகபட்ச பட்ச வயது,
பொது பிரிவினருக்கு – 53 வயது
SC/ST/BCM/BC/MBC/DNC பிரிவினருக்கு – 58 வயது
BECIL Recruitment 2024 ! DEO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.
சம்பளம்:
ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 14.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு & எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு விபரங்கள்:
தேர்வு நாள் – 23.06.2024
தேர்வு கட்டணம்:
SC/SCA/ST/PwD பிரிவினருக்கு ரூ.300/- தேர்வு கட்டணம்
மற்ற வேட்பாளர்களுக்கு ரூ.600/- விண்ணப்பக்கட்டணமாகும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை கண்டுகொள்ளலாம்.