ஹிமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் ஆற்றில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7 வது நாளாக தொடர்கிறது. அவரை போல் டெமோ பொம்மையை ஆற்றில் வீசி வெற்றியின் உடல் எவ்வாறு சென்றிருக்கும் என்று நிகழ்த்தி காட்டிய மீட்பு குழுவினர்.
காணாமல் போன வெற்றி துரைசாமி – டெமோ பொம்மையை வைத்து தேடும் பணி…
முன்னாள் MLA மற்றும் மேயர் பதவிகளில் இருந்தவர் சைதை துரைசாமி. அவரின் மகன் வெற்றி துரைசாமி ஒரு திரைப்பட இயக்குனர்.தனது அடுத்த படத்திற்கு லொகேஷன் பார்க்க ஹிமாசல பிரதேசம் சென்ற வெற்றி அங்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்கு உள்ளாகி சட்லஜ் ஆற்றில் கார் விழுந்தது.இதில் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் சீட் பெல்ட் அணிந்ததால் அவர்களின் உடல் மீட்கப்பட்டது.
ஆனால் வெற்றி துரைசாமி சீட் பெல்ட் அணியாததால் அவரை பற்றிய எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. அவர் ஆற்றில் அடித்து செல்ல பட்டிருக்கலாம் என்று தேடுதல் வேட்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 7 நாட்களாக அவரை தேடும் பனி தொடர்கிறது. இந்த நிலையில் வெற்றி துரை சாமி பயன்படுத்திய செல்போன் மற்றும் அவரின் உடை போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மனித மூளையின் சிறு பாகம் ஒன்றும் கிடைக்கப்பட்டுளது. அது வெற்றியின் மூளையா என்று DNA பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவுகள் நாளை வரும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லை மீறி போறீங்கடா.., ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய மருத்துவர்.., அடுத்து நடந்த டிவிஸ்ட்!!
மீட்பு குழுவினர் வெற்றி துரை சாமியின் உருவம் போல் ஒரு டெமோ பொம்மையை செய்து அதை ஆற்றில் விட்டு அந்த பொம்மை எவ்வாறு ஆற்றில் செல்கிறது என்று நிகழ்த்தி காட்டி தேடி கொண்டிருக்கின்றனர். ஸ்கூபா டைவிங் வீரர்கள், இமாச்சல பிரதேச போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 100 கும் மேற்பட்டோர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.