தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் வழங்கி வருகிறது. குறிப்பாக மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்களை ரேஷன் கடை மூலம் தான் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களை வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருப்பதால் ஊழியர்கள் வெளியில் பொருட்களை விற்று விடுகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில அரசு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, கிராமத்தில் வாழும் மக்களின் குடும்ப வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும், நகரத்தில் வாழும் மக்களின் குடும்ப வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அவர்களின் ரேஷன் அட்டை கார்டுகள் அதிரடியாக நீக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சொந்தமாக கார் அல்லது டிராக்டர் வைத்திருந்தாலும், ஏசி வைத்திருந்தாலும் ரேஷன் கார்ட்டை தகுதி நீக்கம் செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.