பொதுவாக தமிழகத்தில் வருடந்தோறும் நடைபெறும் சட்ட சபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 2ம் வாரத்தில் தான் அரங்கேறும். ஆனால் இந்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் உள்ளிட்ட காரணங்களால் இன்று நடைபெற்றது. மேலும் சட்ட சபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தான் தொடங்கும். அதே போல் நடப்பாண்டில் தனது உரையை கொடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை செயலகத்துக்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் மரியாதையுடன் அரசு வரவேற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து கவர்னருக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசன், சபாநாயகர் அப்பாவு, ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதை கவர்னர் ஏற்று கொண்ட நிலையில் , தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் ஆரம்பித்தது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி உரையை தொடங்கினார். இதையடுத்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். மேலும் கேரளாவில் கவர்னர் தனது உரையை இரண்டு நிமிடங்களில் முடித்தது போல், கவர்னர் ஆர்.என்.ரவியும் இரண்டு நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.