தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 12) தொடங்கிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை இரண்டு நிமிடத்தில் பேசி முடித்தார். இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று நடக்க இருக்கும் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த இருந்தனர். அதாவது, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வாக்குறுதியில் முக்கியமான ஒன்றான இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அது தற்போது வரை நிறைவேற்றபடவில்லை. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் போராட்டம் நடத்தியது. அப்போது பேசிய தமிழக அரசு. அடுத்த 3 மாதத்திற்குள் இதற்கு தக்க முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு தெரிவித்து 4 மாதங்கள் கடந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று டிபிஐ வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்த இவ்வியக்கம் முடிவு செய்து இருந்தது. இதனை தொடர்ந்து சில காரணங்களால் இந்த போராட்டம் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி (பட்ஜெட் தாக்கல் நடைபெறும் நாள்) அன்று நடைபெறும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் தெரிவித்துள்ளது.