Home » செய்திகள் » இனி குழந்தைகளை பாலியல் செய்தால் இதான் தண்டனை.., அதிரடி சட்டத்தை அமல்படுத்திய முக்கிய நாடு!!

இனி குழந்தைகளை பாலியல் செய்தால் இதான் தண்டனை.., அதிரடி சட்டத்தை அமல்படுத்திய முக்கிய நாடு!!

இனி குழந்தைகளை பாலியல் செய்தால் இதான் தண்டனை.., அதிரடி சட்டத்தை அமல்படுத்திய முக்கிய நாடு!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறு குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா, இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் எனும் தீவில் தான் குழந்தைகளை பாலியல் ரீதியாக அதிகம் துன்புறுத்தப்படுகிறார். சொல்ல போனால் கடந்த ஆண்டில் மட்டும் 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏன் கடந்த மாதம் கூட 33 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் இனிமேல் குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் ஆண்களுக்கு சரியான தண்டனையை மடகாஸ்கர் அரசு கொண்டு வந்துள்ளது.

அதாவது 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால், அவர்களின் ஆண்மையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். அதே போல் 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறை மூலம் தண்டிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளிகளுக்கு கெமிக்கல் காஸ்ட்ரேஷன் எனப்படும் ஹார்மோன் சுரப்பை தடுக்கும் மருந்து கொடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாலியல் ரீதியான வழக்குகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2024 தமிழக பட்ஜெட் தாக்கல் ..,ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்”?.., வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top