இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர். இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்ட தொடரில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பே தானாக எழுந்து சென்ற தமிழக ஆளுநர் R.N.ரவி யை கண்டித்து சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட Get out Ravi என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.
இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர்
இன்று தமிழகத்தின் இந்த வருடத்திற்கான முதல் சட்டப்பேரவை கூட்டதொடர் நடைபெற்றது. அதில் ஆளுங்கட்சி தி.மு.க அரசு மற்றும் எதிர்க்கட்சி அ.தி.மு.க அரசு மற்றும் பேரவை தலைவர் அப்பாவு போன்றோர் கலந்து கொண்டனர். அதில் ஆளுநர் R.N.ரவி அவர்களும் கலந்து கொண்டார். தமிழத்தாய் வாழ்த்துடன் பேரவை கூட்டம் தொடங்க பட்டது.
அவர் தனது உரையை 2 நிமிடங்களில் பேசி முடித்துவிட்டார். அவர் தனது உரையில் கூறியதாவது:
தொடக்கத்தில் தமிழில் “பிணியின்மை செல்வம்…என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி தனது உரையை பேச ஆரம்பித்த ஆளுநர் அவர்கள் பின்னர் ஆங்கிலத்தில் பேச தொடங்கி விட்டார். பேரவை கூட்டம் தொடங்கும் போதும் முடியும் போதும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் ஆனால் தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே இசைக்கப்பட்டதாகவும் மேலும் இந்த உரையில் பல்வேறு அம்சங்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி தனது கருத்தை பதிவிட்டார்.
24 வயதில் மரணமடைந்த உலக சாதனை படைத்த முக்கிய வீரர்.., சோகத்தில் தத்தளிக்கும் பொது மக்கள்.., என்ன நடந்தது?
ஆளுநர் அவர்கள் தனது சொந்த கருத்துக்களை கூறுவதாகவும் சட்ட பேரவையில் குற்ற சாட்டு வைக்கப்பட்டது. மேலும் அவர் தனது உரையை 2 நிமிடங்களில் முடித்து விட்டார் என்றும் அவரது உரையை குறையாக பார்க்கவில்லை என்று சபா நாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை சபா நாயகர் வாசித்தார். இறுதியில் தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் ரவி அவர்கள் தானாக எழுந்து சென்று விட்டார். இது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியில் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட இந்த GETOUT ரவி என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் பெரும் வைரலாகி வருகிறது.