என்னது.., "சிறகடிக்க ஆசை" சீரியலில் இருந்து ஹீரோ முத்து பிரேக் எடுக்க போகிறாரா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!என்னது.., "சிறகடிக்க ஆசை" சீரியலில் இருந்து ஹீரோ முத்து பிரேக் எடுக்க போகிறாரா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

தற்போது விஜய் டிவியின் டிஆர்பி-யை உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர். பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என்று கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும்  ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே இந்த தொடரில் முத்து என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வெற்றி வசந்த். இதனை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் 300 எபிசோடுகளை தொட இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர், தற்போது நீங்கள் வெள்ளித்திரையில் நடித்து வருவதால், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பீர்களா இல்லை விலகுவீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் சொல்வதை தற்போது நீங்கள் ரெக்கார்ட் கூட செய்து கொள்ளலாம். கண்டிப்பாக நான் இந்த தொடரை விட்டு விலக மாட்டேன். ஏனென்றால் இந்த சீரியல் தான் எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தது. அதுமட்டுமின்றி இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடங்கள் டெலிகாஸ்ட்டானாலும்  சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் ஹீரோவாக நடிப்பேன். வெப் சீரியஸ், திரைப்படங்கள் இருந்தாலும் இந்த சீரியல் தான் மெயின் எனக்கு என்று கூறியுள்ளார். 

அந்த நடிகைகளை டிரஸ் இல்லாமல் நிற்க வைத்த பிரபல இயக்குனர்.., பின்னணி காரணம் இது தானா?  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *