SOVERIGN GOLD POND 2024SOVERIGN GOLD POND 2024

SOVERIGN GOLD POND 2024. தங்கத்தை ஆபரண பொருளாக மட்டும் வாங்காமல் அதை ஒரு முதலீடாக போட்டு சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தங்க பத்திரம் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அதற்கான விற்பனை இன்று முதல் எல்லா அஞ்சலக நிலையங்கள் மற்றும் வங்கிகளில் தொடங்குகிறது. இதை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியானது 2023-24 ம் ஆண்டிற்கான 4 வது முறை தங்கப்பத்திரம் விற்பனை திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது பிப்ரவரி 12 முதல் 16 வரை அமலில் இருக்கும். இதில் ஒருவர் 1 கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்து பத்திரம் வாங்கி கொள்ளலாம். இதன் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆம் ஆண்டின் முடிவில் அன்றைய தங்கத்தின் மதிப்பில் நமது வங்கி கணக்கில் வட்டியுடன் சேர்த்து வரவு வைக்கப்படும்.

அதன்படி இன்றைய தங்கத்தின் மதிப்பு 1 கிராமிற்கு ரூ.6263/- என விலை நிர்ணயம் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் நாம் வாங்கும் தங்கத்திற்கு மத்திய அரசு 2.5% வட்டி வழங்குகிறது. மேலும் இந்த வட்டியானது ஒவ்வொரு 6 மாதத்திற்கும் கணக்கீடு செய்யப்பட்டு பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகையை நாம் 5 ஆண்டுகள் முடிவிலும் முன்முதிர்வு தொகையாக எடுத்து கொள்ளலாம்.

இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர் R.N.ரவியின் Get out Ravi ஹாஸ்டேக்…

இந்த தங்க பத்திரத்தை online மற்றும் offline இரண்டிலும் வாங்கலாம்.

தேசிய அஞ்சலகங்கள்

வணிக வங்கிகள்

SHCIL (Stock Holding Corpporation of India limited )

CCIL (Clearing Corporation of india private Limited)

Stock Exchange NSE , BSE

போன்ற மேற்கண்ட நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வாங்கி கொள்ளலாம்.

ஆனால் ஆன்லைன் வழியாக வாங்கும் தங்க பத்திரங்களுக்கு 1 கிராமிற்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

8 வருட முடிவில் அன்றைய தங்கத்தின் மதிப்பில் பணம் வட்டியோடு பெற்று கொள்ளலாம்.

இதில் முதலீடு செய்தால் GST வரி கிடையாது

1 மாதத்திற்க்கு 2.5% வட்டி வழங்கப்படுகிறது

நமது தங்கம் பத்திரமாக(PAPER) மாற்றப்படுவதால் திருடு போகும் என்ற பயம் இருக்காது.

தங்க நகைகளை அடமானம் வைப்பது போலே இந்த பத்திரத்தையும் அடமானம் வைத்து கொள்ளலாம்.

செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை

ஆதார் கார்டு நகல்

பான் கார்டு நகல்

புகைப்படம்

JOIN WHATSAPP GET USEFULL INFORMATION

தங்கம் நகையாக வாங்காமல் முதலீடாக பார்ப்போருக்கு இந்த தங்கபத்திரம் ஒரு சிறந்த திட்டமாகும். இன்றே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *