
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் இயக்குனர் மணிகண்டன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் அவருடைய வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் ரொக்கம் மற்றும் நகை திருடு போனதாக தெரியவந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதுமட்டுமின்றி அவர் வாங்கிய இரண்டு தேசிய விருதுகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் அவரின் உழைப்பை திருட கூடாது என்று நினைத்த திருடர்கள் அவரது வீட்டின் முன் தேசிய விருதுகளை வைத்து விட்டு, அதில் ஒரு கடிதத்தையும் விட்டு சென்றுள்ளனர். அதில், ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள், உங்களுடைய உழைப்பு உங்களுக்கு தான் என்று எழுதியுள்ளனர்.