நடிகர் விஷ்ணு விஷால் முதல் மனைவியை விவகாரத்து செய்தது காரணமாக இருந்தவர் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மனமிட்டு பேசியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால்:
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது இவர் நடிப்பில் வெளியான “லால் சலாம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர், ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டைவர்ஸ் வாங்கி பிரிந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வந்த, இவர் இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் முதல் மனைவி விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ” என்னுடைய முதல் மனைவியை நான் விவாகரத்து வேண்டும் என்று கேட்கவில்லை. ஏன் சொல்ல போனால், கோர்ட்டில் நீதிபதி கேட்கும் போது கூட அவர் தான் என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என கூறினார். அப்போது நான் அமைதியாக தான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.