குழந்தையை தத்தெடுத்தது வளர்த்து வருபவரா. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் போது தாய்மை அடையும் பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தையிடமும், பெற்றெடுத்த குழந்தையிடமும் எப்படி பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தையை தத்தெடுத்தது வளர்த்து வருபவரா
பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் இறுதியில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் முடிவை எடுப்பார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முடிவிற்கு இந்த சமுதாயம், சொந்த பந்தங்கள் பல விமர்சனங்களையும், கேள்விகளையும் முன் வைப்பார்கள். அதையும் மீறி அந்த குழந்தையை எந்த பாகுபாடும் இன்றி அந்த பெற்றோர் வளர்க்க வேண்டும். அப்படி அந்த குழந்தையை வளர்த்து கொண்டிருக்கும் போது அந்த பெண் தாய்மை அடைந்தால் வரப்போகும் குழந்தையையும், தத்தெடுத்த குழந்தையையிடமும் எப்படி மனது நோகாமல் நடந்து கொள்வது, இருவருக்கும் இடையில் நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது, நல்ல முறையில் குழந்தைகளை வளர்ப்பது போன்ற பல்வேறு சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அந்த சூழ்நிலையை சுமுகமாக கையாள்வதற்கான வழிகள் இதோ…
ஒரு குழந்தையை தத்தெடுப்பது என்பது அந்த குழந்தைக்கு ஒரு அழகான வாழ்க்கையை கொடுப்பதற்கு சமம். இதனால் அந்த குழந்தை மட்டுமில்லாமல் தத்தெடுத்த பெற்றோரின் வாழ்விலும் வெற்றிடம் காணாமல் போகும். அப்படி குழந்தையை தத்தெடுத்து கொண்டாலும் அந்த தம்பதியினர் குழந்தை பெற்று கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. இத்தகைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் தெளிவான மனநிலையை கொண்டிருக்க வேண்டும்.
Best Oil for Hair Growth – இதையும் ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் !
தத்தெடுத்த குழந்தை வரப்போகும் குழந்தையை தனது உடன்பிறப்பாக கருதும் வகையிலும், புதிய வரவை எண்ணி மகிழும் வகையிலும் தங்களது நடவடிக்கைகள் இருக்கவேண்டும். மற்றவர்கள் எந்த வகையிலும் தத்தெடுத்த குழந்தையின் மனது நோகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதை பற்றிய சரியான புரிதலை தங்கள் குடும்பத்தினரிடம் ஏற்படுத்த வேண்டும்.
இரண்டு குழந்தைகளிடமும் பாரபட்சம் பார்க்காமல் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உறவினர்களின் எதிர்மறையான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. தத்தெடுத்த குழந்தைகள் மரபணு அடிப்படையில் அவர்களின் உயிரியல் பெற்றோரை ஓத்திருந்தாலும், அவர்களின் நடத்தைகள், குணாதிசியங்கள் போன்றவற்றை தத்தெடுத்த பெற்றோரிடமே கற்று கொள்கிறார்கள். அதனால் அவர்கள் உங்களை சார்ந்தவர்கள் ஆவார்கள். நீங்கள் 2 குழந்தைகளிடமும் வேறுபாடு காட்டாதவரை அவர்கள் ஒன்று பட்டவர்கள் தான்.
தத்தெடுத்த குழந்தையிடம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துங்கள். அவர்களின் கண்களை நேருக்கு நேர் பாத்து பேசுவது, முத்தமிடுவது, அரவணைத்து போன்றவை அந்த பிணைப்பை ஏற்படுத்தும். இரண்டு குழந்தைகளுக்கும் முகத்தோற்றம் வேறு பட்டு இருந்தாலும், எண்ணங்கள் செயல்பாடுகளில் அவர்கள் ஒன்று பட்டவர்களாகவே இருப்பார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். குழந்தையை தத்தெடுத்தது வளர்த்து வருபவரா.