SBI SCO Recruitment 2024. பாரத ஸ்டேட் வங்கி என்பது ஒரு இந்திய பன்னாட்டு பொதுத்துறை வங்கி மற்றும் நிதிச் சேவைகள் சட்டப்பூர்வ அமைப்பாகும். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது இந்த வங்கி. இது உலகின் 48வது பெரிய வங்கியாகும். தற்போது இங்கு மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் விபரம், கல்வித்தகுதி, சம்பளம் போன்றவற்றை விரிவாக கீழே காணலாம்.
SBI SCO Recruitment 2024
வங்கியின் பெயர்:
பாரத் ஸ்டேட் வங்கி (State Bank Of India)
பணிபுரியும் இடம்:
இந்தியாவில் உள்ள கிளைகளில் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்.
காலிப்பணியிடத்தின் பெயர் & எண்ணிக்கை:
மேலாளர் கடன் ஆய்வாளர் (Manager Credit Analyst) – 50
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் MBA (நிதி) / PGDBA /PGDBM / MMS (நிதி)/CA / CFA / ICWA இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
கார்ப்பரேட் கிரெடிட்டில் மேற்பார்வையில் நிர்வாகி அல்லது அதற்கு சமமான பதவியில் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 25
அதிகபட்ச வயது – 35
வயது தளர்வு:
இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிக வயது வரம்பில் தளர்வு பொருந்தும்.
IOB Recruitment 2024 ! கரூர் மாவட்டத்தில் பணியிடம் அறிவிப்பு !
சம்பளம்:
ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை மாத சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 13.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.03.2024
விண்ணப்ப கட்டணம்:
General/EWS/OBC வேட்பாளர்களுக்கு – ரூ.750/-
SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கு கட்டணம் இல்லை
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
பணிக்கு விண்ணப்பிக்க | CLICK HERE |
சிறு தகவல்:
இந்த வங்கி 1806 ஆம் ஆண்டில் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா வழியாக நிறுவப்பட்ட கல்கத்தா வங்கியிலிருந்து வந்தது, இது இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான வணிக வங்கியாகும். பேங்க் ஆஃப் மெட்ராஸ், பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மற்ற இரண்டு பிரசிடென்சி வங்கிகளான பாங்க் ஆஃப் கல்கத்தா மற்றும் பாம்பே வங்கியுடன் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவை உருவாக்க, 1955 இல் பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது. ஒட்டுமொத்தமாக வங்கி அதன் 200 ஆண்டு கால வரலாற்றில் இருபதுக்கும் மேற்பட்ட வங்கிகளின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் SBI 221வது இடத்தைப் பிடித்துள்ளது, பட்டியலில் உள்ள ஒரே இந்திய வங்கியாகும்.