Valentines Day Dress Code. பிப்ரவரி மாதம் என்று சொன்னாலே காதலர் தினம் (பிப்ரவரி 14) தான் நம் எல்லோர் மனதிலும் ஞாபகம் வரும். அந்த காதலர் தினத்தப்போ எந்த கலர் டிரஸ் போட்டால் என்ன ரிலேஷன் ஷிப் ஸ்டேட்டஸ் ல இருக்கோம்னு உங்களுக்கு தெரியுமா ? வாங்க இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
Valentines Day Dress Code
இந்த உலகத்தில் காதல் இல்லாத இடமே இல்லை. காற்று நுழையாத இடத்தில் கூட இந்த காதல் நுழைந்து விடும். காதலுக்கு கண்ணில்லை இப்படி ஏகப்பட்ட புகழாரம் காதலுக்கு உண்டு.ஆண்டாண்டு காலமாக இந்த கவிஞர்களும் காதலை வர்ணித்து கொண்டு தான் உள்ளனர். பல சாதி, மதங்களை கடந்து இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது காதலர் தினம் மட்டும் தான்.
காதலர் தினம் அப்போ நாம போடுற டிரஸ் கலர் நம்ம காதலில் எந்த ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் ல இருக்கோம்னு காட்டுகிறதாம். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த காதலர் தினம் அப்போ என்ன கலர் டிரஸ் போடுறதுனு ஒரு குழப்பத்தில் இருப்பார்கள் இந்த இளசுகள். அப்படி என்ன கலர் டிரஸ் தான் நாங்க போடுறது? அப்டினு கேக்குற இளசுகளும், நாங்க காதலிக்கவே இல்லை என்று சொல்லும் இளசுகளும் இந்த டிரஸ் கலர் பத்தி தெரிஞ்சுக்கோங்க…
போடு தகிட தகிட.., 44 வயதில் இமாலய சாதனை பட்டியலில் இணைந்த CSK அணி வீரர்.., வெற்றிக்கு வயது தடையல்ல!!
வெள்ளை:
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது அல்லது ஏற்கனவே ஆள் உள்ளது என்று அர்த்தம்.
நீலம்:
காதலுக்காக காத்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் என்னிடம் காதல் விண்ணப்பம் தரலாம் என்று அர்த்தம்.
பச்சை:
நாம் விரும்பிய நபர் நம்மிடம் வந்து காதலை தெரிவிப்பதற்காக காத்திருப்பது என்று அர்த்தம்
ஆரஞ்சு :
நாம் விரும்பிய நபரிடம் போய் காதலை சொல்ல தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம்..
இளஞ்சிவப்பு :
தற்சமயம் தான் நான் காதலை ஏற்று கொண்டேன் என்று அர்த்தம்
கருப்பு:
காதலிக்க விருப்பம் இல்லை என்று அர்த்தம்.
மஞ்சள்:
தற்போது நான் காதல் தோல்வியில் உள்ளேன் என்று அர்த்தம்.
சிவப்பு:
நான் ஏற்கனவே காதலித்து கொண்டு இருக்கிறேன் என்று அர்த்தம்..