உலகத்தில் பல நிறங்கள் இருந்தாலும் நமக்குனு ஒரு பிடித்தமான கலர் எப்பவும் இருக்கும். அந்த நிறங்களின் தாக்குதல் நாம் வாங்கும் பொருட்களில் இருந்து நாம் உடுத்தும் உடை வரை அனைத்திலும் பிரதிபலிக்கும். அப்படி ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும் நிறத்திற்கு அது தொடர்பான பொதுவான சில பண்புகள் இருக்கும். அவை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிறங்களுக்கும் ஆற்றல் உண்டு
பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் நிறங்கள் நமக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை.வெள்ளை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் சுற்று சூழலில் இருந்து நேர்மறை ஆற்றலை பெற உதவுகின்றன. கருப்பு போன்ற நிறங்கள் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சுகின்றன. இவ்வாறு நிறங்கள் நமக்குள் உடல் மற்றும் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த நிறங்களின் விஷயத்தில் ஆண்களை விட பெண்களே ஒரு குறிப்பிட்ட நிறத்தின் மீது அதிகமாக ஈர்க்கப்படுவதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கருப்பு:
கருப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பவர்கள் மனசோர்வு உள்ளவர்களாகவும், தோல்வியை எண்ணி அதிகம் கவலை அடைபவர்களாகவும் இருப்பார்கள். கருப்பு நிறம் நேர்த்தி மற்றும் பாலுணர்வையும் குறிக்கும்.
வெள்ளை:
வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் சுதந்திரமானவர்களாகவும், எதார்த்தமானவர்களாகவும், ஒழுங்குமுறைகளை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். வெள்ளை நிறம் தூய்மை மற்றும் சமாதானத்தை குறிக்கும்.
சிவப்பு:
சிவப்பு பொதுவாக ஆசை மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்புடையது. இந்த சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் சுறுசுறுப்பானவர்கள், சாகசத்தை விரும்புவார்கள்.
ஊதா:
ஊதா நிறத்தை பலரும் விரும்புவார்கள்.பழங்காலத்தில் அரச குடும்பத்தை சார்ந்தவர்களே ஊதா நிறத்தை அதிகம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஊதா நிறத்தை விரும்புபவர்கள் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
TNPSC தேர்வர்களே.., சட்டுபுட்டுன்னு ரெடியாகுங்க., உங்களுக்கான அறிய வாய்ப்பு – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
இளஞ்சிவப்பு:
‘பிங்க்’ என்று சொல்லப்படும் இளஞ்சிவப்பு காதலுடன் தொடர்புடையது. பொதுவாக பெண்கள் பலருக்கு இந்த பிங்க் நிறம் பிடிக்கும். இந்த நிறத்தை நேசிப்பவர்கள் எல்லையற்ற காதலை வெளிப்படுத்துவார்கள்.
ஆரஞ்சு:
ஆரஞ்சு நிறத்தை நேசிப்பவர்கள் ஆளுமை நிறைந்தவர்கள். பழகுவதற்கு இனிமையான இவர்கள் மற்றவர்களை அன்புடன் அரவணைத்து செல்வார்கள்.
நீலம்:
ஆண்கள் பலருக்கு இந்த நீல நிறம் பிடிக்கும். இது அமைதி மற்றும் நம்பிக்கையை குறிக்கும்.நீல நிறத்தை விரும்புபவர்கள் விசுவாசமானவர்களாக, நல்லிணக்கத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள்.
மஞ்சள்:
மஞ்சள் பொதுவாக ஒரு பிரகாசத்தை நமக்கு கொடுக்கும். இந்த நிறத்தை நேசிப்பவர்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், வெளிப்படை தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.இது நம்பிக்கை மற்றும் நட்பின் சின்னமாகும்.