சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், சினிமா இயக்குனருமான வெற்றி துரைசாமி, கடந்த 4-ம் தேதி தனது தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்ட நிலையில் கார் சட்லஜ் ஆற்றில் விழுந்து அடித்து சென்றது. சம்பவ இடத்தில் டிரைவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் உடல் படுகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி துரைசாமி உடல் கிடைக்காமல் இருந்த நிலையில், மீட்பு படையினரை வைத்து கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு பிறகு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று கண்ணம்மா பேட்டையில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, ” எனது மகனுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தற்போது அரசு பணியில் 259 சாதிகளில் 170 சாதியினர் உள்ளனர். மிஞ்சியுள்ள 89 பிரிவுகளில் இருப்பவர்களை கண்டிப்பாக அரசு வேலையில் அமர வைப்பேன் என்று இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எனது மகன் இறந்து போயிருக்கலாம். ஆனால் எனக்கு ஐஏஎஸ் படித்த மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் இத்தனை பேரை பெற்றிருக்கிறேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன் என்று சூளுரைக்கிறேன்” என்று கண்ணீருடன் கூறினார்.