பொதுவாக இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் கிட்டத்தட்ட 60 கி மீ தொலைவு இடைவெளிகளில் தான் டோல்கேட் இருக்கிறது. எனவே டோல்கேட் என்று அழைக்கப்படும் இந்த சுங்கச் சாவடிகளில் வழியாக செல்லும் இரு சக்கர வண்டிகள் தவிர மற்ற எந்த வாகனங்கள் சென்றாலும் சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம். முதலில் வாகன ஓட்டிகள் பணத்தை கொடுத்து சுங்கக் கட்டணம் செலுத்தினார்கள். இதையடுத்து அவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் fastag முறை அறிமுகம் செய்யப்பட்டு ஆன்லைன் ரீசார்ஜ் முறையில் சுங்கக் கட்டணங்களைச் செலுத்த வழிவகுத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய வசதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் ஃபாஸ்டாக்கிற்கு பதிலாக ஜிபிஎஸ் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வசூலை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த பாதையில் டோல்கேட் இல்லாமலே கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது வாகன ஓட்டிகள் எந்த வழியில் சென்றாலும் எங்கு சென்றாலும் அதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார். மேலும் இந்த முறை வருகிற மார்ச் மாதம் முதல் அமல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.